பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 211 தெய்வச் சேக்கிழார் கண்ட விதமாகும் இது. இதற்கு அரண் செய்வதுபோலச் சேக்கிழாரின் இந்த மதிப்பீடு முற்றிலும் நியாயமானது என்பதை நிரூபிப்பதுபோலப் பின்னர் ஒரு நிகழ்ச்சி நடை பெறுகிறது. இங்குக் கூறப்பெற்ற நிகழ்ச்சிகள் நடை பெற்ற காலத்தில் தலைமகன் ஆகிநின்ற தமிழ் ஞான சம்பந்தர் இன்னும் இம்மண்ணில் அவதரிக்கவில்லை. ஆளுடைய பிள்ளையார் திருஅவதாரம் செய்கையில், வாகீச முனிவருக்கு ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் நிறைந்திருக்க வேண்டும். திருவதிகை வீதியில், வாகீசர் புகுந்ததைச் சேக்கிழார் கூறுகின்றபொழுது அம் முனியுங்கவருக்கு ஏறத்தாழ நாற்பது வயது ஆகியிருத்தல் வேண்டும். எனவே, மேலும் இருபது ஆண்டுகள் கழிந்துப் பிள்ளையாரைப் பார்ப்பதற்காக வாகீசர் சீழ்காழிக்கு வரும்பொழுது அறுபது பிராயங்களைக் கடந்த அவரது புற, அக வடிவங்கள் எவ்வாறு இருந்தன என்பதைத் தம் கூற்றாக அல்லாமல், பிள்ளையார் கூற்றாகத் வைத்து தெய்வக் கவிஞர் கூறுவது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும். பிரசித்தி பெற்ற ஒருவரை நாம் நேரே கண்டிராவிடினும் அவர் இப்படித்தான் இருப்பார் என்று ஒவ்வொருவர் மனத்திலும் ஒரு கற்பனை வடிவை அமைத்துக்கொள்ளுதல் இன்றும் நிகழ்வ தாகும். நாவரசர், ஆளுடைய பிள்ளையின் சிறப்புக்களைக் கேள்வியுற்று ஞானப்பால் உண்ட