பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 213 இருவர் பாடல்களில் வைதிகக் குறிப்பு : உண்மை என்ன? சேக்கிழார் காலத்தில் சாதி வேறுபாடும், சைவ, வைணவப் போராட்டமும் தலைவிரித்து நின்றன. பல்லவர்கள் விட்டுச் சென்ற நம்பிக்கைகளும், வேள்வி முதலிய கிரியைகளும் அன்றும் ஒரளவு இருந்துவந்தன. திருஞானசம்பந்தர், நாவரசர், சுந்தரர் என்ற மூவர்முதலிகள் பல்வேறு வகையான் புரட்சிகளையும் புதிய சிந்தனைகளையும் நாட்டில் பரப்பியிருந்தாலும் அவர்கள் காலத்திற்குப் பிறகு இவை மெள்ளத் தளர்வடையத் தொடங்கின. அந்நிலையில் சமுதாயப் புரட்சியைத் தாமே சொல்வதுபோல் கூறினால் அதற்கு வரவேற்பு இராது என்று கருதிய சேக்கிழார், இம்மூவர் வரலாறுகளில் அங்கங்கே புரட்சிக் கருத்துக்களைப் புகுத்தினார். அவ்வாறு செய்வதற்கு இவர்களுடைய வரலாறுகளும் அருளிச்செயல்களும் பெரிதும் உதவின. மூவரில் காலத்தால் முற்பட்டவர் நாவரசர். பல்லவ மகேந்திரவர்மன் காலத்தில் வாழ்ந்தவர். அந்நாளில் வேத அடிப்படையிலான வைதிக சமயம் வீறு பெற்றிருந்தது. அச்சமயத்தில் வேள்விகள் செய்தல், வேதம் ஓதுதல், அங்கம் ஒதுதல் ஆகியவையே. மக்களை உய்விக்கும் என்ற கருத்து வலுப் பெற்றிருந்தது. கி.பி. இரண்டாம், நூற்றாண்டு முதல் மக்களிடையே பெருஞ் செல்வாக்குப் பெற்றிருந்த சில வடமொழிப் புராணங்களும் தீர்த்த