பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 சேக்கிழார் தந்த செல்வம் யாத்திரை செய்தால் எல்லாப் பாவங்களையும் போக்கிக் கொள்ளலாம் என்று பறைசாற்றின. மேலே குறிப்பிடப்பெற்ற வைதிக சமயமும், தீர்த்த யாத்திரை பற்றிப் பேசும் புராணங்களும், சடங்குகட்கு முக்கியத்துவம் தந்தனவே தவிர, இறை உணர்வை ஊட்டவில்லை. இந்தச் சடங்குகளைச் செய்தாலே மோட்சத்தை அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கை வலுப் பெற்றிருந்த காலம் அது. இந்தச் சூழ்நிலையில் தான் திருநாவுக்கரசர் பெருமான் இவ்வுலகிடைத் தோன்றுகிறார். இளமைப் பருவத்திலேயே காத்து ஆள்பவர் காவலை இகழ்ந்து புறச்சமயம் சென்று பல்லாண்டுகள் கழித்து மீட்டும் சைவம் வருகையில் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகட்கு மேற்பட்டவராக இருந்தார். இறை உணர்வு இல்லாமல் செய்யப்பெறும் எந்தச் சடங்கும் எந்தத் தீர்த்தாடனமும் ஒரு பயனையும் தரா என்பதை அனுபவரீதியாக அறிந்து கொண்டார் நாவரசர். ஆனால், அவரைச் சுற்றியிருந்த சமுதாயம் சடங்கு, தீர்த்தம் என்பவற்றையே சுற்றி வந்தது. அந்த நிலையை மாபெரும் புரட்சியாளராகிய நாவரசர், சமுதாயத்தின் இந்தப் பயித்தியக்காரத்தனமான செயல்களைக் கண்டிக்கத் தொடங்கினார். பிற் காலத்தில் வந்த சித்தர்கள்தான் இந்தப் புரட்சிக் கருத்துக்களை முதன் முதலாகப் பேசினார்கள் என்று நினைப்பது பெரும் தவறாகும். நாவரசர் பெருமான்