பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 215 சமுதாய மூட நம்பிக்கைகளைத் தகர்க்கும் முறையில் இதோ பேசுகிறார், கங்கை யாடிலென் காவிரி யாடிலென் கொங்கு தண்கும ரித்துறை யாடிலென் ஓங்கு மாகட லோதநீ ராடிலென் எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே (திருமுறை. 5-99-2) வேத மோதிலென் வேள்விகள் செய்யிலென் நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென் ஓதி அங்கமோ ராறு முனளிலென் ஈச னையுள்கு வார்க்கன்றி யில்லையே - (திருமுறை: 5-99-4) காணநாடு கலந்து திரியிலென் ஈனமின்றி இரும்தவஞ் செய்யிலென் ஊனையுண்ட லொழிந்துவான் நோக்கிலென் ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே (திருமுறை: 5-99-6) கூட வேடத்த ராகிக் குழுவிலென் வாடி ஊணை வருத்தித் திரியிலென் ஆடல் வேடத்தன் அம்பலக் கூத்தனைப் பாட லாளர்க்கல் லாற்பய னில்லையே. திருமுறை 5-99-7)