பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 சேக்கிழார் தந்த செல்வம் நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென் குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலென் சென்று நீரிற் குளித்துத் திரியிலென் என்று மீசனென் பார்க்கன்றி யில்லையே. (திருமுறை: 5-99-8) கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை ஆடினாலும் அரனுக்கன் பில்லையேல் ஓடு நீரினை ஒட்டைக் குடத்தட்டி முடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே. (திருமுறை: 5-99-9) சடங்குகள் என்று கூறிச் சாடுகிறார். அவருடைய காலத்தில் சைவ சமயம் ஏற்றுக்கொள்ளாத துறவு மார்க்கமும், காடுகள் சென்று கனசடை வளர்த்து, மூச்சைக் கட்டுப்படுத்தி தவம் செய்யும் வழக்கம் இருந்துவந்ததால் அதனையும் சாடுகிறார். அடுத்தபடியாகப், புராணங்கள் கூறும் தீர்த் தாடனத்தையும் மிகக் கடுமையாகத் தாக்குகிறார். கோடி தீர்த்தங்களில் கலந்து குளித்துவிட்டால் வீடு பேறு நிச்சயம் என்று கருதும் அஞ்ஞானிகளைப் பார்த்து ஓர் அற்புதமான உவமையால் அவர்களைச் சாடுகிறார். ஒடும் நீரினை ஒட்டைக் குடத்தில் அடைப்பவன் அறிவிலி என்பதை அனைவரும் அறிவர். ஆனால், தன் தவற்றை அறிய முடியாத மூர்க்கன் ஒட்டைக் குடத்தில் பிடித்த நீர் வெளியே ஒடிவிடுவதை அறிந்துகொள்ள முடியாமல் அதன்