பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 217 மேல் ஓர் மூடியைப் போட்டுவிட்டு, நீர் உள்ளே இருக்கிறது என்று நினைப்பவன் மூர்க்கனிலும் மூர்க்கனாவான். ஆண்டு, அனுபவம் ஆகியவற்றில் முதிர்ந்தவரான நாவரசரின் இப்பாடல்கள் சேக்கிழாரை மிகவும் தாக்கியிருக்க வேண்டும். அதன் பயனாகவே அன்றைய சமுதாயம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் பல புரட்சிகளை அவர் காப்பியத்துள் புகுத்தினார். மேலே கூறியவற்றோடு அமையாது ஆதி புராணக் குறுந்தொகையிலும் வேள்விகளையும், காயத்ரி மந்திரங்களையும் இப்பெருமான் சாடுதலைக் d#5ITsgsjsjTsol)/Tls). எரிபெ ருக்குவர் அவ்வெளி ஈசனது உருவ ருக்கம தாவது உணர்கிலார் அரிஅ யற்கரி யானை அயர்த்துப்போய் நரிவி ருத்தம தாகுவர் நாடரே . (திருமுறை: 5-100-7) அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்க னாவான் அரனுரு அல்லனோ இருக்கு நான்மறை ஈசனை யேதொழும் கருத்தி னைநினை யார்கன் மனவரே - . (திருமுறை 5-100-8) முதற்பாடல் வேள்வியைச் சாடுகிறது. இந்த இடத்தில் நியாயமான ஓர் ஐயம் எழ இடம் ஏற்படும். இப்