பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 சேக்கிழார் தந்த செல்வம் பெருமானின் சம காலத்தவரான திருஞானசம்பந்தர் ரிக் வேதிகள் குடும்பத்தில் பிறந்தவர். அக் குடும்பத் தினர் வேள்விகள் செய்யும் வழக்கமுடையவர்கள். 'அன்றியும் கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே, செற்றார் வாழ்தில்லை” என்று பாடுபவர் ஞான சம்பந்தர். அப்படியானால் ஞானசம்பந்தர் ஏற்றுக் கொள்ளும் வேள்வியை நாவரசர் எதிர்க்கிறாரா என்ற வினா நியாயமானதே ஆகும். ஆழ்ந்து நோக்கினால் இவர்கள் இருவரும் இரண்டு விதமான வேள்வி களைப்பற்றிப் பேசுகின்றனர் என்பதை அறிய முடியும், வேத வழிப்பட்ட வைதிகர்கள் பிராமணங் களில் கூறப்பட்ட முறையில் செய்துவந்த வாஜபேயம் முதலிய இருபத்தோரு வேள்விகளும் ஞானசம்பந்தர் கூறும் வேள்விக்கு மாறுபட்டவை. வைதிகர்கள் இயற்றிய அந்த 21 வேள்விகளிலும் வேள்வித் தலைவர்கள் அல்லது வேள்வித் தெய்வங்கள் இந்திரன், வருணன், அக்கினி, ஆதித்தன் முதலிய வர்களே ஆவர். அவ்வேள்விகளில் சிவபெருமானுக்கு இடமே இல்லை. அவ்வேள்வி களில் அளிக்கப்படும் அவிஸ் இந்திரன் முதலியவர் களுக்குச் செல்லுமே தவிரச், சிவபெருமானுக்கு அவிர்ப்பாகம் <$ali_ இல்லை. சிவபிரானை அல்லாமல், திருமாலாகிய மகா விஷ்ணுவிற்குக்கூட அவிர்ப்பாகம் கிடையாது. எனவே, இந்திரன் முதலானோர்களைக் குறித்து இந்த வேதியர்கள் செய்த வேள்விகளைத்தான் நாவரசப் பெருமான் சாடுகிறார். இங்கே இந்திரன் முதலிய தெய்வங்களை