பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 3 அந்தத் தலைமை அமைச்சர். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் விலங்குகளைப் போல் வாழாமல், மனிதனாக வாழவேண்டுமென்றால், அவனிடம் ஒரு குறிக்கோள் இருத்தல் வேண்டும். பெருஞ் செல்வத்தில் வாழும் மனிதர்களிடம் இந்தக் குறிக் கோள் மறைந்துவிடுகிறது. பல்லவர்கள். ஒகோவென்று வளர்ந்திருந்த காலகட்டத்தில் வாழ்ந்திருந்த திருநாவுக்கரசர் பெருமான் இந்த உண்மையை வெளியிட்டார். "பாலனாய்க் கழிந்த நாளும்” (திருமுறை: 4.5710) என்று தொடங்கும் பாடலில் குறிக்கோள் இலாது கெட்டேன்’ என்று பாடுகிறார். அவர் கூறுவது தன்னைப்பற்றி அன்று அந்நாளில் வாழ்ந்த சமுதாய மக்களைக் கண்டே ஆகும். கால்நடையாகவே தமிழகம் முழுவதையும் மட்டுமன்றி வடநாடு வரையிலும் சென்று மீண்ட அப்பெரியார், மக்கள் வாழ்க்கையில் குறிக்கோள் இல்லை என்பதை அறிந்து அதனைத் தன்மேல் ஏற்றிப் பாடுகிறார். 12ஆம் நூற்றாண்டில் தமிழகத்தைச் சுற்றிப் பார்த்த சேக்கிழாருக்கும் திருநாவுக்கரசர் பாடலின் இந்த ஓர் அடி மனத்தில் நிழலாடிக்கொண்டே யிருக்கிறது. அடுத்தபடியாக அவர் கண்ட காட்சி அவர் மனத்தில் மற்றும் ஓர் நெருடலை ஏற்படுத்திற்று. அதே நாவரசர் பெருமானின் மற்றொரு பாடிலின் ஓர் அடி. சேக்கிழார் மனத்தில்