பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 219 அழைத்து இந்திராய ஸ்வாஹா, வருணுய ஸ்வாஹா' என்ற மந்திரங்களை ஓதி அக்கினியில் அவிர்ப்பாகத்தை இடுகின்ற வைதிகர் களைக் குறித்து ‘grff) பெருக்குவரவ் வெளியீசனது உருவ வருக்கமதாவது உணர்கிலார்’ என்று கூறுகிறார். சிவபெருமானை முதற்பொருள் என்று கொள்ளாமல், இந்திரனை வேள்வித் தலைவனாக ஏற்று நடத்தப்படும் இந்த வைதிக வேள்விகளைத் தான் நாவரசர் சாடுகிறார். இதனெதிராக ரிக் வேதத் தைப் பின்பற்றிப் பிராமணங்களில் கூறப்பட்டபடி வேள்வி செய்தாலும், அவ்வேள்வியின் தலைவனாக இந்திரன் முதலிய சிறு தெய்வங்களைக் கொள்ளாமல் சிவபெருமானையே முதல்வனாகக் கொண்டு வேள்விகள் செய்யும் ஒரு சிறு பிரிவினர் வேதங்கள் தோன்றிய பஞ்சாப், ஹரியானா மாநிலப் பகுதிகளில் வேதம் தோன்றிய காலத்திலேயே இருந்துவந்தனர். இப்பிரிவினருக்குக் கெளண்டின்ய கோத்திரத்தார் என்று பெயர். சிவபிரானை முதற்பொருளாக ஏற்றுக் கொள்ளாத வைதிகர்கட்கும் இந்தக் கெளண்டின்யக் கூட்டத்தாருக்கும் பகைமை மூண்டு இவர்கள் வெருட்டப்பட்டு விட்டனர். நாளா வட்டத்தில் இந்த கெளண்டின்யர் பரம்பரை வடநாட்டில் மறைந் தாலும் தமிழகத்தில் சங்க காலத்திலேயே வேரூன்றிவிட்டது. பூஞ்சாற்றுார் பார்ப்பான் கெளனியன் விண்ணந் தாயன் என்ற (புறம்.166)