பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 சேக்கிழார் தந்த செல்வம் ஒருவன் சிவபரம்பொருளை முன்னிலைப்படுத்தி இருபத்தொரு யாகங்களைச் செய்தான் என்று புறநானூறு பேசுவதாலும், திருஞானசம்பந்தர் கெளனியன் சம்பந்தன்” என்று தம்மைக் கூறிக் கொள்ளுவதாலும் ரிக்வேதியர்களிடையே இப்படிச் சிவபெருமானை முன்னிறுத்தி வேள்வி செய்யும் இனம் ஒன்று இருந்ததை அறிகிறோம். ஞானசம்பந்தர் குறிப்பிடும் வேள்விகளெல்லாம் இத்தகையவைகளே. இவர்களைப் பொறுத்தமட்டில் ரிக்வேதிகளாக இருந்தாலும் வேதத்தைவிட ஐந்தெழுத்தே தலை யானது என்ற கொள்கை உடையவர்கள். இதனையே ஞானசம்பந்தர் வேத நான்கினும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே' (3–307–1) என்று பாடிச் செல்கிறார். எனவே, திருநாவுக்கரசர் சாடியது ரிக்வேதிகள் இந்திரனை முன்னிலைப் படுத்திச் செய்த வேள்விகளையே ஆகும். அருக்கன் ஆவான் அறன் உரு அல்லனோ என்று நாவரசர் பாடியதும் இக் கருத்தை வலியுறுத்தும். எனவே, தேவாரத்தில் வேதநாயகன் என்றும், வேதியர் நாயகன் என்று வருவதும், வேதம் என்ற சொல் பயன்படுத்தப்படுவதும் கெளனியர்கள் போற்றும் வேதம் என்ற அடிப்படையிலேயே ஆகும். இக்கருத்தைச் சேக்கிழார் மிக நன்றாக அறிந்திருந்தார் என்பதைப் பெரியபுராணம் முழுவதிலும் காணலாம். "வேதநெறி தழைத்தோங்க' என்று திருஞான