பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 221 சம்பந்தர் புராணத்தைத் தொடங்கும் சேக்கிழார் பெருமான் அடுத்தபடியாக மிகு சைவத்துறை விளங்க என்று பாடுவதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். கெளனியர் அல்லாத ஏனைய வேத வழிப் பட்ட வைதிகர்கட்கும் சைவத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்த வைதிகர்கள் விக்கிரக வழிபாட்டையோ ஆலயத்தையோ அபிடேகம் அர்ச்சனை என்பவற்றையோ ஒத்துக்கொள்வது மில்லை; ஏற்றுக்கொள்வதுமில்லை. ஆனால், ஞான சம்பந்தப்பெருமான் 'ஆனின் ஐந்து ஆடுவார்' என்று பாடுவதும், "செந்தமிழர், தெய்வமறை நாவர், அருங்கலைஞர், அந்தமில் குணத்தவர்கள் * விழிமிழலையே' என்று பாடுவதும், இவர்கள் பழைய வைதிக வகுப்பைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்ற கருத்தை வலியுறுத்துவ தாகும். இவரை அல்லாமல் திருநாவுக்கரசுப் பெருமான் வேத வழிபட்ட வைதிகர்களைச் சாடியதைக் கண்டோம். அதே திருநாவுக்கரசர் - "நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதன்காண்” - (திருமுறை. 6-8-78) என்றும், சாமவேத கந்தர்வம் விரும்புமே என்றும் பாடுவது முன்னர்க் கூறிய வேறுபாட்டை அறிந்து கொண்டவர்கட்கே புலனாகும். -