பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 சேக்கிழார் தந்த செல்வம் இத்துணைப் பெரிய காப்பியத்தையும், அதன் சிறப்புக்களையும் விரிவாகக் காண்டல் இந்த நூல் அளவில் அடங்காது. ஆதலால் ஒரு சில வரலாறு களைமட்டும் கதைப் போக்கில் அதிகம் ஈடுபடாமல் அதில் உள்ள சிறப்புகளைமட்டும் பின்வரும் பகுதிகளில் காணலாம். நேரில் காணாமலே போற்றிய அந்தணர் திங்களுரில் வாழ்ந்த அப்பூதி என்ற அந்தணப் பெருமகனார் அப்பர் அடிகளை நேரே காணா விட்டாலும் அவரைப்பற்றிக் கேள்வியுற்று, அவரையே குருவாகக் கொண்டு தாம் வழங்கும் பொருள் அனைத்திற்கும் திருநாவுக்கரசு என்றே பெயரிட்டு வழங்கிவரலானார். வடிவுதாம் காணாராயினும், வாக்கின் வேந்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றைக் கேள்விப்பட்டு அவர்மாட்டு அடிமை பூண்டவர் அப்பூதியார். - நாவரசர் பெருமான், அப்பூதியார் வைத்த தண்ணிர்ப் பந்தலில், திருநாவுக்கரசர் தண்ணிர்ப் பந்தல் என்று எழுதியிருப்பதைக் கண்டு வியப்புறு கிறார். இந்த வியப்புக்கு ஒரு காரணமும் உண்டு. நாவுக்கரசர் என்பது இறைவனால் வாகீசருக்குக் கொடுக்கப்பட்ட காரணப் பெயர் ஆகும். அதனால் அப்பெயர் பெருமான் காலத்தில் அவரைத் தவிர யாரும் அறியாத பெயராகும். எனவே, அப்பெயர்