பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 சேக்கிழார் தந்த செல்வம் $, ஆனால், தம் உயிரினும் மேலாக மதித்துப் போற்றும் நாவரசர் பெயரை வேறொரு பேர்’ என்று அலட்சியமாகக் கூறப்பட்டதைக் காதில் கேட்ட அந்தணர் நிலைகலங்கிவிட்டார். இதுவும் மனித இயல்புதான். நம்மால் போற்றி வழங்கப்படும் பொருளை அதற்குரிய மரியாதை தராமல் யாரேனும் பேசினால் நமக்கும் சினம் வருவது இயல்பே ஆகும். அப்பூதியாருக்குச் சினம் தோன்றுவதற்கு இதுவும் ஒர் காரணம். இதனை அடுத்து மற்றோர் காரணமும் உண்டு. வேறொரு பேர் என்று கூறியவர் வேற்றுச் சமயத்தாராகவோ இல்லறத்தாராகவோ விவரம் புரியாதவராகவோ இருந்து இவ்வாறு கூறியிருப்பின் அப்பூதியார் கோபம் இந்த அளவு வளர்ந்து இருக்காது. இதனெதிராக வந்தவர் சிவவேடத் தோடும் துறவிக் கோலத்துடனும் இருந்துகொண்டு இவ்வாறு கேட்டது பெருங்கொடுமை என்று நினைக்கின்றார் அப்பூதியார். சிவவேடத்துடன் நின்ற யாரும் நாவரசர் பெருமையை அறியாதிருக்க முடியாது. அப்படி இருந்திருந்தால் அவர் இவ் வேடத்திற்குப் பொருத்தம் இல்லாதவர். அல்லது புறச் சமயத்தாராய் இருத்தல் வேண்டும். எனவே, அப்பூதியார் பின்வருமாறு பேசுகிறார், நின்ற மறையோர் கேளா, நிலைஅழிந்த சிந்தையராய் "நன்றுஅருளிச் செய்திலீர்! நாண்இல் அமண் - பதகருடன்