பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 225 ஒன்றிய மன்னவன் துட்சி திருத்தொண்டின் உறைப்பாலே வென்றவர்தம் திருப்பேரோ வேறுஒருபேர்?” என வெகுள்வார். (பெ. பு-1800) "பொங்குகடல் கல்மிதப்பில் போந்துஏறும் அவர்பெருமை அங்கணர்தம் புவனத்தில் அறியாதார் யார்உளரே! மங்கலம் ஆம் திருவேடத்துடன் நின்றுஇவ் வகை மொழிந்தீர்; எங்குஉறைவீர்? நீர்தாம் யார்? இயம்பும் என - - இயம்பினார். (பெ. பு-1802) இரண்டாவது பாடலில் எங்குறைவீர்? நீர் தான் யாம்? இயம்பும் என்று அப்பூதியார் பேசியது இயல்பான அவர் பண்பாட்டிற்கு ஒரளவு பொருந்தாததாக உள்ளது. பண்பாட்டின் உறை விடமாய் புலனழுக்கற்ற அந்தணாளராய் உள்ள அப்பூதியார் ஒரு சிவனடியாகப் பார்த்து இவ்வாறு பேசுவது முறையா? என்ற ஐயம் சிலர் மனத்திலாவது தோன்றல் கூடும். நாவரசர் பெருமானின் வடிவையும், முகபாவத்தையும் கண்ட யாரும் இப்படி பேசி இருக்க முடியாது. அப்பூதியார் பேசியது உண்மைதான். இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை ஒரே சொல்லால் விளக்கி விட்டார் சேக்கிழார். பெருமை அறிந்து கொள்ளாமல்,