பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 சேக்கிழார் தந்த செல்வம் சிவவேடம் தாங்கி எதிரே நிற்கின்றார் ஒருவர் என்பதைக் காணக்கான அப்பூதியாரின் சினம் மேலோங்கிவிட்டது. அதனால் தான் எங்கு உறைவிர்? மங்கலமாம் திருவேடத்துடன் நின்று இவ்வகை மொழிந்தீர், நீர் தாம் யார்? என்ற வினாக்களை எழுப்புகிறார். அதன்பிறகு நடந்தவை அனைவரும் அறிந்த நிகழ்ச்சிகளாகும். இந்நிகழ்ச்சியை மனக்கண் முன் கொண்டுவர வேண்டும். இருவர் எதிரெதிராக நிற்கின்றனர். ஒருவர் சிவனடியார் வேடத்தில் இடையில் கட்டிய ஒரே கந்தையுடன் காட்சி தருகிறார். அவரின் எதிரே பண்பாடுடைய அந்தணர் ஒருவர் இருக்கின்றார். அவர் எதிரே உள்ள அடியாரைப் பார்த்துத் தான் பேசுகிறார். கண்டவர் களையெல்லாம் கனியச் செய்யும் இச் சிவன் அடியார்களின் முகம் அப்பூதியாரை ஏன் மயக்க வில்லை? இவ் வினாவிற்கு விடையாக 'தின்னின் சிறந்தவை நின் நாமங்கள்’ என்றார் பிறரும். எனவே, திருநாவுக்கரசு என்ற பெயரில் தன்னை முழுவதுமாகப் பறிகொடுத்தவர் அப்பூதியார் ஆகலின் அந்நாமத்துக்கு உரியவர் எதிரே நிற்கும் பொழுதுகட அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. இறைவனுடையவும் அவன் அருள் பெற்ற அடியார்களுடையவும் அவன் நாமங்கள், அவர்களை விட உயர்ந்தவை என்பது இந் நாட்டவர் கண்ட உண்மை. இக்கருத்தை சிவப் பிரகாச சுவாமி