பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 227 கள் நால்வர் நான்மணிமாலையில் பின்வருமாறு பாடுகிறார், "உற்றான் அலன் தவம், தீயில் நின்றான் அலன் ஊண் புனலா அற்றான் அலன் திருநாவுக்கரசு எனும் ஓர் சொற்றான் எழுதியும் கூறியுமே என்றும் துன்பில் பதம் பெற்றான் ஒரு நம்பி அப்பூதி என்றும் பெருந்தகையே’ (நால்வர் நான்மணிமாலை) இப்பாடலின்படி பார்த்தால் ஒருவர் தவம் செய்ய வில்லை. பஞ்சாக்னி மத்தியில் நிற்கவில்லை, உணவு, நீர் என்பவற்றை அருந்தாமல் விடவில்லை. இவை ஒன்றையும் செய்யாமல் திருநாவுக்கரசு என்ற பெயரை எப்பொழுதும் கூறியும், எல்லா இடங்களிலும் எழுதியும், யாரும் பெறுதற்கரிய வீடு பேற்றைப் பெற்றார் என்றால் அவர்தான் அப்பூதி என்னும் பெருந்தகையார் ஆவார். வீடு பேற்றை அருளக் கூடிய திருநாவுக்கரசு என்ற பெயரை வேறொரு பேர் என்று ஒருவர் கூறினால் சினம் வராமல் இருக்குமா? அப்படிக் கூறியவர் புறச் சமயத்தாராக இருப்பின் இந்த மந்திரத்தின் அருமைப் பாட்டை அறியாதவர் என்று நினைத்து அப்பூதியார் சிரித்துவிட்டுப் போயிருப்பார். ஆனால், இப்படிச் சொல்பவர் சிவவேடம் புனைந்து நின்று கூறினார்; ஆதலால் தான், இப்படியும் ஒருவர் இருப்பாரா என்ற எண்ணத்தில் அப்பூதியார் கோபம்