பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 சேக்கிழார் தந்த செல்வம் அடைகிறார். மேலும் நாவரசரின் பெருமையை 'அங்கணர் தம் புவனத்தில் அறியாதவர் யாரு மில்லை என்ற முடிவுடன் இருப்பவர் ஆதலின் அதைக்கூடத் தெரிந்துகொள்ளாமல் சிவவேடத்துடன் எதிரே நிற்பவரைப் பார்த்து, நீர் எங்கே வாழ்கின்றீர், உம்முடைய பெயர் என்ன என்று கேட்பதில் வியப்பொன்றுமில்லை. நாம மகிமையின் பெருமை இதுவாகும். எண்பதுக்கு மேலும் தேவையா? இப் பெருமானுடைய புராணத்தில் கடைசிப் பகுதியில் வரும் ஒரு நிகழ்ச்சி சிலருடைய மனத்தில் ஒர் ஐயத்தைத் தோற்றுவிக்கின்றது என்பது உண்மை தான். நாவரசர் பெருமானின் வயது எண்பதையும் கடந்த நிலையில், வழக்கம்போல் திருப்புகலூரில் உழவாரப் பணி செய்து கொண்டிருக்கும் நாட்களில், ஒரு நாள் நடந்த நிகழ்ச்சியாகும் இது. பெருமான் புல்லைச்செதுக்கும் உழவாரப் படையில் பொன்னும், மணியும் வைரங்களும் குப்பல் குப்பலாக வருகின்றன. அவற்றை ஏறெடுத்தும் பாராமல் பெருமான் கூட்டி வாரி அருகிலிருந்த பள்ளத்தில் கொட்டிவிட்டார். இதே நேரத்தில், தேவ மாதர் ஆகிய ரம்பை, ஊர்வசி முதலானவர்கள் மானுட வேடம் தாங்கிப் பெருமான் எதிரே நடனம் ஆடுகின்றனர். கூத்தனின்