பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிக்கோளுடன் வாழ்ந்த தமக்கையும் தம்பியும் 229 நடனத்தில் நாள்முழுதும் லயித்திருக்கும் பெருமானின் கண்களில், மனத்தில் எதிரே நாட்டியம் ஆடுபவர்கள் வடிவமோ நாட்டியமோ தென்பட வில்லை. இங்குக் கூறப்பட்ட கருத்துக் களைத், தெய்வச் சேக்கிழார், நாவரசர் புராணத்தில் 417 முதல் 422 வரை உள்ள பாடல்களில் மிக விரிவாகப் பாடுகிறார். இன்று இதனைக் கற்பவர்கள் எண்பத்தொரு வயது நிரம்பிய ஒருவர் இவற்றில் ஈடுபடவில்லை என்று கூறுவதில் என்ன சிறப்பு இருக்கிறது. என்று நினைத்துக் கேட்கவும் செய்கின்றனர். இதைப் புரிந்துகொள்ளச் சேக்கிழாரைச் சற்று ஆழமாகக் கற்க வேண்டும். தெய்வச் சேக்கிழார் கற்காத கலையே இல்லை. அதிலும் மனித மனத்தின் இயல்புகளை-புறமனம், அகமணம், ஆழ்மனம் ஆகியவற்றின் இயல்புகளைஇக்கால மனவியலார் ஆய்ந்துள்ளதைவிட அதிகமாக -oilfigeira TTY. gpubcor:#36) (deeper consciousness) இறையுணர்வு நிறைந்திருந்தாலும், பொறி, புலன் களோடு கலந்து பணிபுரியும் புறமனம் (External mind) ஒரோ வழி கட்டுப்பாட்டை மீறி அலைவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இவ் உண்மையை நன்கு அறிந்திருந்த வள்ளுவப் பேராசான் துறவு என்ற அதிகாரத்தில் அகப், புற துறவுபற்றிப் பத்துக் குறள்கள் பாடிய பின்னர் மறுபடியும் அவா அறுத்தல் என்ற ஓர் அதிகாரத்தைப் பாடுகிறார். எத்துணை யளவு துறந்தார்க்கும் ஒரோவழி புலன்கள்மேல் பற்றுச்