பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 சேக்கிழார் தந்த செல்வம் செல்லும். அது தவிர்க்க முடியாதது. எனவே, முழுத்துறவு பூண்டவர்களும் வயது வேறுபாடின்றி இப்பொறி புலன்களால் அவ்வப்பொழுது ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தவே துறவு’ என்ற அதிகாரத்திற்குப் பின் 'அவா அறுத்தல்’ என்ற அதிகாரம் வைக்கப்பட்டு உள்ளது. மனித மனத்தின் திருகல்களில் இது முக்கியமானது என்பதை நன்கு அறிந்திருந்த தெய்வச் சேக்கிழார், இந்த இரண்டு அதிகாரங்களுக்கும் விளக்கம் தருபவர் போல நாவரசர் புராணத்தில் இந்த நிகழ்ச்சியை வைத்துக் காட்டுகிறார். மனத் திருகல்களில் மாற்றம் உண்டாக வயது குறுக்கே நிற்பதில்லை என்பதை நன்கு அறிந்திருந்தால் மட்டுமே இந்நிகழ்ச்சியைப் பாடிய தெய்வச் சேக்கிழாரின் சிறப்பை அறிய முடியும். நாவரசர் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அவற்றை அவர் எதிர் கொண்ட விதம், பணி செய்வதே. குறிக்கோள் என்ற கருத்துடன் வாழ்ந்த அவர் வாழ்க்கை முழுவதும் இக்காலத்துக்கும், இனி எதிர்காலத்துக்கும், எல்லாச் சமுதாயங்களுக்கும் தேவையான படிப்பினையாகும். நாவரசர், திலகவதியார் வாழ்க்கை பற்றிய குறிப்புக்கள் சேக்கிழார் தந்த செல்வத்தின் ஐந்தாம் பகுதியாகும். శ్రీశ్రీశ్రుతక