பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 சேக்கிழார் தந்த செல்வம் கூனல்வளை திரைசுமந்து கொண்டுஏறி மண்டுகழிக் கானல்மிசை உலவுவளம் பெருகுதிருக் காரைக்கால். (பெ. பு-1722) இப்பாடலின் முதலிரண்டு அடிகள் அவ்வழிகளை விளக்குகின்றன. மிகுமானம், தருமம், வாய்மை என்ற மூன்று குணங்கள் அவர்கள்பால் நிறைந்திருந்தன என்கிறார் கவிஞர். இம்மூன்றிலும் மானத்தை முதலில் வைத்தது சிந்திப்பதற்கு உரியது. சிறு வாணிபத்தில் பண்டமாற்று முறையும், G5fTGð)gவாங்கிக்கொண்டு பொருளைக் கொடுப்பதும் இயல்பாகும். இந்த வியாபாரத்தில் மானத்திற்கு ஒன்றும் வேலையில்லை. ஆனால், கோடிக்கணக்கில் நடைபெறுகின்ற பெரு வியாபாரத்தில் நம்பிக்கையே மூலதனம் ஆகும். அந்த நம்பிக்கையின்மேல் தோன்றுவது மானஉணர்ச்சி. கப்பல் மூலம் பண்டங்களை ஏற்றி அனுப்பும்பொழுது தீவினை காரணமாகக் கப்பல் கவிழ்ந்து இழப்பு ஏற்பட்டால் அப்பொறுப்பு யாரைச் சார்ந்தது? இக்காலத்தில் பொருளை அனுப்புபவர்கள் காப்பீட்டு முறையில், நஷ்டம் வராமல் காத்துக்கொள்கின்றனர். இம்முறை பயிலாத அக்காலத்தில், நஷ்டம் ஏற்பட்டால் அதனை அடுத்தவன் தலையில் போடாமல் தைரியத்தோடு அதனை ஏற்றுக்கொண்டனர். பெரும்பாலும் எழுத்துக்கூட இல்லாமல் வாய்ச்சொல் மூலமாகவே வாணிபம் நடைபெறுவதை இன்றும் காணலாம். பங்கு மார்க்கெட்டில் ஒரு குறிப்பிட்ட பங்கு விலை ஏறும் என்ற கருத்தில் ஆயிரக்