பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர்குல மாணிக்கம் 233 கணக்கான பங்குகளை ஒருவர் வாங்கிவிடுகிறார். அவ்வாறு வாங்கியதற்கு எழுத்து மூலம் பதிவேடுகள் பெறச் சில நாட்களாவது ஆகும். பணமும் கை மாறவில்லை. கையெழுத்தும் போடப்படவில்லை. என்றாலும், பல்லாயிரக் கணக்கான ரூபாய்கள் பெறுமானமுள்ள பங்குகள் கைமாறி விட்டன. இப்பொழுது திடீரென்று அன்று மாலையோ, மறுநாள் காலையோ அந்தப் பங்குகள் பெருவீழ்ச்சி அடைகின்றன என்று வைத்துக்கொள்வோம். முதல் நாள் பங்குகளை வாங்கியவர் வெகு சுலபமாகத் தாம் வாங்கவில்லை என்று கூறிவிட்டார். இங்கேதான் மானப் பிரச்சினை தோன்றுகிறது. நம்பிக்கை அடிப்படையாகக் கொண்டு செய்யயப்பட்ட பேரத்தில் 24மணி நேரத்திற்குள் நஷ்டம் வந்தாலும் மானம் உடையவர்கள் அந்த நஷ்டத்தை ஏற்றுக் கொள்வார்கள். வள்ளுவப் பேராசான், இந்த மானம்பற்றிக் கூறும்பொழுது, மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். (குறள் - 969) என்று கூறுவதைக் காணலாம். . இந்த மானம் என்ற சொல்லுக்குப் பொருள் எழுதிய பரிமேலழகர், 'மனிதன் தன் நிலையில் தாழாமையும், தெய்வத்தால் தாழ்வு நேர்துழி உயிர் வாழாமையும் என்று பொருள் எழுதியது இங்கு நம் சிந்தனையில் நிறுத்தவேண்டிய