பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 சேக்கிழார் தந்த செல்வம் ஒன்றாகும். எழுத்துக்கள், கையொப்பங்கள் என்பவை மறு விநாடியில் உலகத்தின் மற்றொரு பகுதிக்கு Fax மூலம் அனுப்பப்படும் இந்நாளில்கூட வாணிபத்தில் பொய்யும் புரட்டும் நிரம்பி வழிகின்றன. இவை ஒன்றுமே இல்லாத காலத்தில் நம்பிக்கை ஒன்றையே மூலதனமாக வைத்துப் பெருவாணிகம் நடைபெற்றது என்றால், அது மிகுமானம் 2.®)l_lŁ! வணிகர்களிடையேதான் நடைபெற முடியும். எனவேதான், சேக்கிழார் மானத்திற்கு முதலிடம் தருகிறார். "தருமத்தின் வழிநின்று’ என்பது அடுத்துக் கூறப் பட்டதாகும் தருமத்தின் வழிநிற்றலாவது யாது? தம்மிடம் உள்ள மிகு பொருள் ஒரு தனிமனிதன் உழைப்பால் வந்தது என்பது பெருந்தவறாகும். ஒரு சிறு கடை என்றால்கூடக், கடைக்காரரைத் தவிர இருவர் அல்லது மூவர் பணிபுரிய வேண்டும். பெரு வாணிகம் என்றால் முதல் இட்டு வாணிபம் செய்பவரைத் தவிர, நூற்றுக் கணக்கானவர்கள், சில சமயங்களில் ஆயிரக் கணக்கானோர் பணிபுரிய நேரிடும். இவர்கள் அனைவருடைய உழைப்பும் சேர்ந்துதான் பெரு வாணிபம் நடைபெறுகிறது. தான் கொடுக்கும் சிறு ஊதியம்மட்டும் அவர்கள் உழைப்பிற்குப் போதுமானது என்று நினைப்பது பெருந்தவறாகும். தனக்கு கிடைக்கும் பெருலாபத்தில் தன்னிடம் பணிபுரிந்தவர்கட்கும் சுற்றத்தாருக்கும்,