பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 சேக்கிழார் தந்த செல்வம் இரண்டடிகளில் சமுதாய வளர்ச்சிக்கு மிகமிகத் தேவையான வாணிபத்தையும், அதனை செய்கின்ற பெரு வணிகர் இயல்பையும் தெய்வச் சேக்கிழார் கூறுவது பெரு வியப்பைத் தருவதாகும். அவர் வாழ்ந்த 12ஆம் நூற்றாண்டில் மட்டுமல்லாமல் இந்த 20ஆம் நூற்றாண்டிலும், இன்னும் வரப்போகும் எந்த நூற்றாண்டிலும் இந்த உண்மையை பெருவணிகர்கள் மறத்தலாகாது என்பதை கவிஞர்பிரான் விளக்கி விட்டார். இதன் அடுத்த இரண்டடிகளில் இயற்கையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியைத்தான் கூறுகிறார். கடல் அலைகள் தூக்கி எறியும் வளைந்த சிப்பி முதலியன மெள்ளத் தரையில் ஊர்ந்து உப்பங்கழி களிடையே புகுகின்ற செயல் என்றும் கடற்கரை நகரங்களில் நடைபெறும் செயலாகும். இயற்கை யோடு இயைந்த இந்த வருணனையில் குறிப்பாக ஒரு சிறப்பைக் கவிஞர் உணர்த்துகிறார். காரைக்காலில் ஏற்றுமதி, இறக்குமதி வாணிபம் நடைபெறுவதை குறிப்பால் உணர்த்துகிறார். இத்தகைய பெருவணிகர் களின் தலைவனாக உள்ளவன் தனதத்தன் என்ற வணிகனாவான். பின்னர் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்படும் புனிதவதியாரைப் பெற்ற பெருமை உடையவர் தனதத்தர். நல்கூர்ந்தார் செல்வமகள்' என்று சங்கப்பாடல் குறிப்பது போல் பெருஞ்