பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர்குல மாணிக்கம் 237 செல்வர்க்கு ஒரே மகளாய் பிறந்தவர் புனிதவதியார், ஆவார். பெருஞ்செல்வர் வீட்டில் ஒரே குழந்தையாய் பிறப்பதென்பது பெரும் பிரச்சனைக்குரிய விஷயம் ஆகும். ஆனால் பிற்காலத்தில் தலையால் நடந்து கயிலைச் செல்லும் பேர் மாற்றம் உடைய பெரு மாட்டியார் எவ்வாறு தன் இளமைப் பருவத்தைச் செலவிட்டார் என்று கூற, வருகிறார் காப்பியப் புலவர். அம்மையாரின் குழவிப் பருவம் முதல் இளமைப் பருவம் வரை வளர்ந்த நிகழ்ச்சியை வழக்கம் போல் இரண்டே அடிகளில் கூறி முடிக்கிறார். - "வண்டல்பயில் வனவெல்லாம் வளர்மதியம் புனைநதசடை அண்டர்பிரான் திருவார்த்தை அணையவரு வனபயின்று, தொண்டர்வரில் தொழுது, தாதியர்போற்றத் தனைமுலைகள் கொண்டுநுசுப்பு ஒதுங்குபதம் கொள்கையினில் குறுகினார். ’’ (பெ. பு-1726) வண்டல் என்ற தமிழ்ச் சொல், இளம் பெண் குழந்தைகள் விளையாடும் விளையாட்டைக்குறிக்கும். இந்த விளையாட்டில் கூட கோயில் கட்டி விளையாடும் பருவத்தை புனிதவதியார் கொண்டி ருந்தார். வாய்திறந்து மழலைச் சொல் பேசும் போதே கூட இறைவனைப் பற்றியே பேசினார் என்பதை, அண்டர் பிரான் திருவார்த்தை அணைய வருவன