பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் -15, திருவள்ளுவரைப்போல இவற்றின் இன்றியமை யாமையை அழகிய சிறு குறட்பாக்களில் கூறி யிருக்கலாம். அம்முறையில் பாடினால் அவை மக்களிடம் சென்று சேருமா என்பதில் அவருக்கே சந்தேகம் வந்திருக்க வேண்டும். பொதுவாக எந்த நாட்டு மக்களையும் அந்த நாட்டில் தோன்றியனவும், பிற மொழிகளில் தோன்றியனவுமான நீதி நூல்கள் பெரிதும் கவரவில்லை என்ப்தைத் தலைமை அமைச்சர் நன்கு அறிந்திருந்தார். மனித மனவி' - நன்கு அறிந்திருந்த அவருக்கு எல்லா களிடமும் இடம் பெற்றிருந்த ஒ' நினைவிற்கு வந்தது. மனிதன. குணங்களில் முனைப்பாக இருக்கும் தன்னைப் போன்ற மற்றொரு அல்லது மனிதர்களுடைய வாழ்க் ை அறிந்து கொள்வதில் தீராத விருப்பம் ஆகும். இதனைச் சேக்கிழார் நன்கு அறிந்திருந்தார். பிறரைப்பற்றி அறிந்துகொள்ள விரும்பும் இந்த ஆசையை curiosity என்று ஆங்கிலத்தில் கூறுவர். எனவே, கதை மூலம் இக் கருத்துக்களை வெளியிடுதல் தாம் நினைத்த பயனை அளிக்கும் என்று சேக்கிழார் கருதியிருத்தல் வேண்டும். புதிதாக மலர்ந்து கொண்டிருக்கும் சோழர் கட்குத் தாம் கூற வேண்டிய அறவுரையை இராம காதை மூலம் கூறக் கம்பன் முடிவு செய்தான். அதேபோல, தாம் சொல்ல விரும்பியதை எந்தக் கதையின் மூலம் வெளிப்படுத்தலாம் என்று சேக்கிழார் ஆராய்ந்திருக்க வேண்டும். அவர் கூற