பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர்குல மாணிக்கம் 239 'கல்யாணம்’ அம்மையாருக்குத் திருமண வயது வந்தவுடன், நாகப்பட்டினத்தில் தனத்த்தனைப் போன்றே பெரு வாணிபம் செய்யும் நிதிபதி தன் மகனுக்கு மணம் முடிக்க விரும்பினான். அந்நாளைய வழக்கப்படி மணமகனின் தாய், தந்தையர் நேரே சென்று பெண் கேட்காமல், தம் இனப் பெரியவர்கள் சிலரை அனுப்பிப் பெண் கேட்டனர். இந்த முறையிலும் ஒரு சிறப்பிருப்பதை நாம் இன்றும் காண முடியும். மணமகனின் தாய், தந்தையர் நேரே வந்தால், பெண்ணைப் பெற்றவன் அந்தத் திருமணத்தை விரும்பவில்லை என்றால், அவர்கள் முகத்திற்கு நேரே எவ்வாறு அதனை வெளியிட முடியும்? அந்தச் சிக்கல் நேராதிருக்கவே பெரியோர்களை அனுப்பி னான் என்கிறார் கவிஞர். இன்றைய சமுதாயத்திற்குச் சேக்கிழார் கற்றுத்தரும் மற்றொரு பாடமாகும் இது. இரண்டு கூட்டத்தாரும் ஒப்புக் கொண்டமையின் திருமணம் இனிதாக நடந்தது. மண மண்டபத்தில் அம்மையாரும் பரமதத்தனும் அமர்ந்திருக்கும் காட்சியைக் கற்பனையில் காண் கிறார் சேக்கிழார். புனிதவதியைப் பரமதத்தனுக்கு மணம் செய்துகொடுத்தார்கள் என்றுதான் சொல்லி யிருக்க வேண்டும். என்ன காரணத்தாலோ சேக்கிழார் ஓர் உருவகத்தை இங்குக் கையாள்கிறார்.