பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 சேக்கிழார் தந்த செல்வம் தளிர் அடிமென் நகைமயிலைத் தாது அவிழ்தார்க் காளைககுக களிமகிழ் சுற்றம் போற்றக் கல்யாணம் செய்தார்கள் (பெ. பு-1732) என்று கூறுகிறார். வேறு வகையாகக் கூறினால் சுற்றத்தார்கள் மகிழ்ச்சி அடைய ஒரு மயிலை ஒரு காளைக்குக் கல்யாணம் செய்தார்கள் என்று சேக்கிழார் பாடுவதில் இன்றைய சமுதாயத்திற்கு ஒரு மாபெரும் படிப்பினையைத் தருகின்றார். ஏனைய குழந்தைகள்போல் அல்லாமல் வண்டல் விளையாட்டில்கூடத் திருக்கோயில் கட்டி விளையாடும் அந்தப் பெண்ணின் மனநிலையைத் தாய் தந்தையர் கவனித்ததாகத் தெரியவில்லை. இத்தகைய புதுமைப்பெண்ணிற்குப், பரமதத்தன் ஏற்ற மணவாளனா என்ற ஆராய்ச்சியை அம்மையாரின் பெற்றோர்களோ சுற்றத்தாரோ செய்ததாகத் தெரிய வில்லை. ஒரு பெரும் செல்வன் தான் பெற்ற மகளை மற்றொரு பெருஞ்செல்வன் மகனுக்குத் திருமணம் முடிக்க விரும்புவது தன்னுடைய பெருமைக்கு அதுவே உகந்தது என்று நினைப்பதும் இன்றும் நம் சமுதாயத்தில் காணப்படும் ஒரு நிகழ்ச்சி ஆகும். வருந்தத் தகுந்த இப்பழக்கம் மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே இருந்துவருகிறது. அதைக் கண்டு மனம் நொந்த சேக்கிழார், அது மாபெரும் தவறு