பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர்குல மாணிக்கம் 241 என்பதை நேரிடையாகக் கூறாமல், மென்மையும் அழகும் ஆடுகின்ற இயல்பும் உடைய பறவை இனத்தில் தலைசிறந்த மயிலுக்குக் «ΕΙΤζί) όΥΤ ஏற்புடையதா என்பதைச் சிந்திக்காமல் கல்யாணம் செய்தார்கள். திருமணம், வதுவை, மணவினை என்றுதான் பிற இடங்களில் சேக்கிழார் குறிக் கின்றார். அப்படி இருக்க, தமிழ் இலக்கியத்தில் அதிகம் பயின்றுவராத கல்யாணம் என்ற சொல்லை அவர் பயன்படுத்துவதன் நோக்கம், 'மணம் பரப்பும் திருமணம் அன்று இது என்பதைக் குறிப்பதற்கேயாம். கோவலன்-பரமதத்தன் : கண்ணகி-புனிதவதி திலகவதியார் ஒரே மகள் ஆதலின், அவைைளப் பிரிய மனம் இல்லாத தனதத்தன் ஒரு பெரு வீட்டில் மணமக்களைக் குடிவைத்தான். இந்த மணத்தில் மயில் போன்ற சாயலையும் அழகையும் உடைய புனிதவதியாரை மணந்ததால், மணமகன் மகிழ்ந்தான அல்லது வேறு காரணத்திற்காக மகிழ்ந்தான என்பதை மிக அற்புதமாகச் சேக்கிழார் இதோ பாடிக் காட்டுகிறார். மகள் கொடையின் மகிழ்சிறக்கும் வரம்புஇல்தனம் கொடுத்ததன்பின் நிகர்ப்பு அரிய பெருஞ்சிறப்பில் நிதிபதிதன் குலமகனும் தகைப்பு இல்பெருங் காதலினால் தங்கு மனைவளம் - பெருக்கி,