பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர்குல மாணிக்கம் 243 இத் தொடரில் நகரத்தாரும் சுற்றத்தாரும் மகிழும் படியாக நடைபெற்றதே தவிரக் கண்ணகியைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை என்ற கருத்தும் தொனிப்படக் காணலாம். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இருவரும் வணிகர் குலத்தைச் சேர்ந்தவர்கள். மாபெரும் வணிகர்களின் ஒரே LD&Sółf IT35 இருந்தவர்கள். இருவருடைய # ÐốốồT வாழ்க்கையும் வெவ்வேறு காரணங்களுக்கு நேரிதாக நடைபெறவில்லை என்பதையும் அறிகிறோம். ஒரு பெண் மசீஞ் செய்துகொண்டு, இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், அதே பிறப்பில் அவள் வீடுபேறு அடைய முடியும் என்பதை இரண்டு வரலாறுகளும் உணர்த்துகின்றன. மாங்கனி பரமதத்தன்-புனிதவதியார் இல்லறம் நன்கு நடை பெற்றதென்றே கருத வேண்டும். பரமதத்தனை வியாபார நிமித்தம் காணவந்தவர்கள் இரண்டு பழங்களை அவனுக்குக் கையுறையாகத் தர, அவற்றை அவன் வீட்டிற்கு அனுப்பிவிட்டான். உணவிற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்த புனிதவதியார் இல்லின்கண் சிவனடியார் ஒருவர் பசி மிகுதியால் உணவை விரும்பி உள் நுழைந்தார். அப்பொழுது சோற்றைத் தவிரக் கறிகள், குழம்பு முதலியவை தயாராக இல்லை. இந்த நிலையில் எல்லாம் தயார் செய்துபோடுகிறேன் என்று அம்மையார்