பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 சேக்கிழார் தந்த செல்வம் கூறியிருப்பின், வெகு பசியால் வந்த அடியார் பெருந்துயருற்றிப்பார். எனவே, உடனடியாக அவர் பசியைப் போக்க விரும்பிய அம்மையார் சோற்றை இட்டு, தயிரை விட, சிவனடியார் உண்ணத் தொடங்கினார். இரண்டு மாங்கனிகள் இருப்பதை நினைவுகூர்ந்த அம்மையார் ஒன்றை அடியார் இலையிலிட, அவர் மகிழ்ந்து உண்டு சென்று விட்டார். அம்மையார் நடத்திய இல்லறத்தில் நடந்த இந்நிகழ்ச்சியும் நமக்கு ஒரு படிப்பினை ஆகும். இன்றும் நம்மில் பலருடைய வீடுகளில் இது நடைபெறுவதைக் காணலாம். பசியோடு வந்த விருந்தினரைப் பார்த்து, "வராத விருந்தினராக வந்திருக்கிறீர்கள்; உங்கட்குச் சிறப்பாக உணவு தயாரித்துப் பறிமாறுகிறேன்” என்று கூறி, உணவுத் தயாரிப்பில் இறங்கும் பல சகோதரிகளை நாம் கண்டுவந்திருக்கிறோம். பசியோடு வந்த விருந்தினர் மயக்கம் அடையும் நிலையில் பெரிய விருந்து படைத்து மகிழும் நம் சகோதரிகள் புனிதவதியாரின் இல்வாழ்க்கையிலிருந்து அறிந்துகொள்ள வேண்டிய பாடமாகும் இது. இதனை அடுத்துப் பரமதத்தன் கடையிலிருந்து மதிய உணவிற்கு வருவதுபற்றிச் சேக்கிழார் பின் வருமாறு கூறுகிறார். மற்று, அவர்தாம் போயினபின் மனைப்பதியா ஆகிய வணிகன் உற்றபெரும் பகலின்கண் ஓங்கியபேர் இல் எய்திப்