பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர்குல மாணிக்கம் 245 பொற்பு உறமுன் நீராடிப் புகுந்து, அடிசில் புரிந்து அயிலக் கற்புடைய மடவாரும் கடப்பாட்டில் ஊட்டுவார். (பெ. பு-1743) இப்பாடலில் அம்மையாரின் அருமைப்பாட்டை அறியாத பரமதத்தனை நினைக்குந்தோறும் சேக்கிழாரின் மனத்தில் வருத்தம் பொங்குகிறது. ஏச வேண்டிய நிலையில் உள்ளவனாயினும் அம்மையாரை மணந்த காரணத்தால் ஒரு சிறப்பைப் பெற்றுவிடுகிறான். ஆதலால், நேரடியாக அவனை ஏச இயலாமல், சந்தர்ப்பம் வரும்பொழுதெல்லாம் குறிப்பாக அவனைப்பற்றிப் பேசுகிறார் சேக்கிழார். 'மனைப்பதியா ஆகிய வணிகன்’ என்ற சொல்லில் அவனைக் குறிக்கின்றார். பின்னும் ஒர் இடத்தில் 'இல் இறைவன் (பெ. பு-1750) என்று இவனைக் குறிக்கிறார். மேலாகப் பார்ப்பதற்கு வீட்டுக்குரியவன் என்ற பொருளை இச்சொற்கள் தருமேனும், ஆழ்ந்து நோக்கினால், அம்மையாருக்குப் பதி என்றில்லாமல், மனைக்குமட்டும் பதியாக உள்ளான் என்றும், புனித வதியாருக்கு, இறைவன்(கணவன்) என்று கூறாமல், அந்த வீட்டுக்கு இறைவன் என்ற பொருளைத் தரும் இந்த இரண்டு சொற்களும் வேண்டுமென்றே சேக்கிழாரால் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாடு, வெப்பம் அதிகம் நிறைந்த பகுதி ஆதலால் குளித்தல் என்பது தமிழர்களைப் பொறுத்த மட்டில் விடியற்காலையில் செய்யப்பெறுகின்ற ஒரு