பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 சேக்கிழார் தந்த செல்வம் கடமையாகும். காலைக் கடன்கள் என்று சொல்லும் பொழுதே நீராடுதலும் அதனுள் அடங்கிவிடுகிறது. இதற்கு மாறாக மதிய உணவுக்குமுன் ஒருவன் நீராடினான் என்றால் அது வியப்பைத் தரும். பரம தத்தன் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தபொழுது நீராடிவிட்டு அமுதுண்ண அமர்ந்தான் என்று கறுவது வேண்டுமென்றே கூறப்பட்டதாகும். வாணிகம், பணம் என்பவையே அவன் குறிக்கோள் ஆகலின், காலையில் குளிக்காமல் கடைக்குச் சென்று விட்டான் என்ற முறையில் மதியம் வந்து குளித்தான் என்று பாடுகிறார். இதுவரை பரமதத்தன் நடந்து கொண்டதை ஒரளவு மன்னிக்கலாம். அவன் போன்ற பலர், இன்றும் உலகிடை உண்டு. பொருள் சேகரிப்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் தனியே வீட்டிலிருக்கும் மனைவிபற்றிச் சிந்திப்பது அருமையாகும். உண்ணும்பொழுதுகட, மனைவியின் கைபாகத்தை மகிழ்ந்து போற்றி உண்ணாமல், எதையோ ஒன்றை நினைத்துக் கொண்டு, என்ன உண்கிறோம் என்றுகூட கவலைப் படாமல், அவசர அவசரமாக உண்டுசெல்வதை இன்றும் காண்கிறோம். தனி ஒரு மனிதனுக்காகப் பலவகைக் கறி, குழம்பு முதலியவற்றைத் தயாரிக்கும் பெண்ணுக்கு அவன் மகிழ்ந்து உண்ணுவதைப் பார்க்கும்பொழுது ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இக் கருத்தை,