பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர்குல மாணிக்கம் 247 முளிதயிர்ப் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம், கழா அது, உடீஇ குவளை உண்கண் குய்ப்புகை கழுமத் தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர் "இனிது” எனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே (குறுந்தொகை 167) என்ற பாடலில் அற்புதமாக விளக்குகிறான் சங்கப் புலவன். புனிதவதியாரின் கைபாகத்தைப் பரமதத்தன் விரும்பி உண்டானோ தெரியவில்லை. குளித்து முடித்த பிறகு உணவு உண்ண வந்தான். அம்மையார் பரிமாறினார். பிரச்சினை தொடங்குகிறது. அனைத்தையும் படைத்த அம்மையார், கணவன் அனுப்பிய கனிகளில் எஞ்சி இருந்த ஒரு கனியை அவன் இலையிலிட்டார். அது மிகச் சுவையுடைய தாக இருந்ததாகலின், பரமதத்தன் இதோ பேசத் தொடங்குகிறான். மனைவிையார் தாம்படைத்த மதுரம்மிக வாய்த்தகனி தனைநுகர்ந்த இனியசுவை ஆராமைத் தார்வணிகன் இனையது ஒருபழம் இன்னும்உளது அதனைஇடுக. (பெ. பு-1745) அக்கனி மிகவும் ருசியாக இருந்ததால் "நான் அனுப்பிய இரண்டில் இன்னும் ஒரு பழம் இருக்குமே, அதனையும் எனக்கு இடுவாய்”