பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 சேக்கிழார் தந்த செல்வம் என்றான். சற்று நின்று நிதானிக்கவேண்டிய இடம் இது. கணவன், மனைவி இருவர்தாம் இருக்கின்றனர். கனியை உண்டவுடன், அதன் சுவையை அறிந்த சராசரிக் கணவனாக இருந்தால்கூட "இவ்வளவு இனிய பழத்தை இதுவரை உண்டதில்லை. நல்லவேளை யாக இரண்டைக் கொண்டுவந்து தந்தனர். மற்றொரு பழத்தை நீ உண்பாயாக’ என்றுதானே கூறியிருப்பான்? அந்தச் சராசரி மனிதனிலும் பல மடங்கு குறைந்துவிட்டான் பரமதத்தன். "எஞ்சி இருக்கின்ற பழத்தில் ஒரு பகுதியை அரிந்து கொடு’ என்றுகூடக் கேட்காமல் அதனையும் இடுக, என்று கூறினான் என்றால், அவனை நினைந்து பரிதாபப்படுவதுதவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. இத்தகைய கணவன் மார்கள் இன்றும் பலர் உள்ளனர் என்பதையும் மறப்பதற்கில்லை. இந்த மூன்றடிகளில் பரமதத்தனை எடைபோட்டுக் காட்டிய சேக்கிழார், நான்காவது அடியில் மற்றொரு புதுமையைப் புகுத்துகிறார். "இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என அணையது தாம் கொண்டுவர அணைவார்போல் அங்கு அகன்றார்’ என்ற இந்த அடியின்படி பார்த்தால், மற்றொரு பழத்தையும் இடுக என கூறியவுடன் அந்தப் பழத்தைக் கொண்டு வர வீட்டினுள் புகுந்துவிட்டார். இந்த அடியின் மூலம் இரண்டு கருத்துக்களைப் பெறவைக்கிறார் சேக்கிழார். முதலாவது, இத்தனை ஆண்டுகள்