பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சேக்கிழார் தந்த செல்வம் விரும்பியவை இரண்டு: ஒன்று குறிக்கோள், இரண்டு தொண்டு. இறையன்புடன் கூடிய தொண்டு ஏன்? இந்த இரண்டாவது விஷயத்தில் ஒரு சிக்கல் ஏற்படும் என்பதைச் சேக்கிழார் நன்கு அறிந்திருந்தார். இறை யுணர்வு இல்லாத மக்கள் தொண்டு நீடித்து நிலைக்க முடியாது. தொண்டு செய்கிறவன் இறையுணர்வு பெற்றவனாக இருப்பின் நான் தொண்டு செய்கிறேன் என்ற முனைப்பு அவன் மனத்தில் தோன்றவே தோன்றாது. • r சேக்கிழார் கருதியது என்ன? இவற்றையெல்லாம் நன்கு ஆராய்ந்த சேக்கிழார், இந்த நாட்டில் உள்ள மக்களுக்குக் குறிக்கோள், த்ொண்டு, இறையண்பு என்ற இம் மூன்றையும் ஒரே நேரத்தில் புகட்ட வேண்டும்; இவை ஒன்றுக்கொன்று த்ொடர்புடையவை என்பதையும் அறிவிக்க வேண்டும், அதையும் கதைகள் மூலமாக உணர்த்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவுடன் தமிழ் நாட்டில் வழங்கும் கதைகளையும், இந்தியா முழுதும் பரவியுள்ள இதிகாசங்களையும் எடுத்து அலசியிருக்க வ்ேண்டும். எந்தக் கதை எடுத்தாலும் அவருடைய எண்ணத்திற்கேற்ப இந்த மூன்றையும் ஒரே கதையில் வைத்துக் காட்டுவது கடினம். என்பதை உணர்ந்தார். அந்நில்ையில் தேவாரத் திருமுறை