பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர்குல் மாணிக்கம் : 249 அவனோடு இல்லறம் நடத்திய பிறகு அம்மையார் தமக்கென்று ஒரு தனித்துவம் இல்லாமல் ஓர் இயந்திரமாகவே ஆகிவிட்டார். அவன் என்ன சொல்லுகிறானோ அதனுடைய தராதரத்தை ஆராயாமல் சொல்லியதை அப்படியே நிறைவேற்றும் இயந்திரமாக ஆகிவிட்டமையின் இப்பொழுது 'இடுக’ என்று அவன் கூறினவுடன், இயந்திர கதியில் அதனை எடுத்து வர அவர் புறப்பட்டுவிட்டார். இரண்டாவதாக, மற்றொரு பழம் இல்லை என்பதை அவர் அறவே மறந்துவிட்டார். அதற்கு ஒரு காரணமும் உண்டு. யாருக்கும் எதுவும் ஈயாத உலோபியின் வீட்டில், என்றோ ஒருநாள் ஒருவருக்குச் சோறிட்டால் அதன் பெருமையை ஓயாது நினைந்து பேசிக்கொண்டே இருப்பர். புனிதவதியாரின் வீடு அத்தகைய தன்று. நாள்தோறும் வரும் அடியார்களை விரும்பி உண்பிப்பவர், ஆதலால் பசியால் வாடும் அடியார்கள் எந்த நேரத்திலும் அவர்களது வீட்டிற்கு வருவதுண்டு. அவர்களை நன்கு உபசரித்துப் பழக்கப்பட்டவர் ஆதலின், இன்று. அடியாருக்கு இட்ட மாம்பழத்தை அறவே மறந்துவிட்டார். பல அடியார்களுக்கு ஓயாமல் உணவிடும் பழக்கமுடைய வர் அம்மையார் என்பதைச் சேக்கிழார் மிக நுணுக்க மாக, "உணவின் மிகு வேட்கையினால் ஒருவர் மனையுள் புகுந்தார்'(பெ. பு-1788) என்று பாடுகிறார். வெளியே நின்று உள்ளே வரலாமா என்று கேட்டு உத்தரவு