பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 சேக்கிழார் தந்த செல்வம் பெற்று உட்செல்வதுதானே மரபு? அவ் வாறிருக்க யாரையும் கேட்காமல் அடியார் உள் புகுந்தார் என்றால், வாலாயமாக இந்த அடியார்கள் எந்த நேரத்திலும் நேரே உள்ளே நுழைவதும், உணவு உண்டு செல்வதும் அம்மையார் வீட்டில் பழக்கம் என்று தெரிகிறது. ஆகவே, சிவனடியாருக்கு மாம்பழம் இட்டதை அம்மையார் அறவே மறந்து விட்டார். அதனால்தான் கணவன் இடுக’ என்ற உடன் பழக்க வசத்தால் பழத்தைக் கொண்டுவர உள்ளே சென்றார். உள்ளே சென்றபிறகுதான், பழத்தைச் சிவனடியார்க்கு இட்டது நினைவுக்கு வந்தது. அந் நினைவு முன்னரே இருந்திருந்தால் கணவன் கேட்டவுடன் இதனைச் சொல்லியிருக்கலாம். ஆனால், பழத்தை எடுத்துவருபவர்போல உள்ளே வந்து விட்டு, பிறகு இந்த விளக்கத்தைக் கூறினால், சந்தேகமே வடிவான வணிகன், இதை ஏன் முன்னரே சொல்லவில்லை என்பான். இந்தத் தர்ம சங்கடமான நிலையில் அம்மையார் "நினைந்து இடத்து உதவும் விடையவர்தாள் தம் மனம் கொண்டு” (பெ. பு-1746 வேண்டினார். அவன் அருளால், கனி ஒன்று அவர் கையிடைப் புகுந்தது. மிக்க மகிழ்ச்சியோடு அதைக் கொண்டுவந்து கணவன் இலையிலிட்டார்.