பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர்குல மாணிக்கம் 251 அந்தக் கனியையும், ருசித்து உண்டான் பரம தத்தன். வணிகன் ஆதலால் நாட்டின் பல்வேறு பாகங்களில் விளையும் மாங்கனிகளின் தரத்தையும், சுவையையும் நன்கு அறிந்திருந்தான். இப்பொழுது அவன் உண்ட பழம் அவன் அறிந்த எந்த மாங்கனி யோடும் ஈடு கூறமுடியாததாக இருந்தது. உடனே மனைவியைப் பார்த்து, இக்கனியின் w உற்றசுவை அமுதினும்மேற் படஉள தாயிட இதுதான் முன்தருமாங் கனிஅன்று, மூஉலகில் பெறற்குஅரிதால்; பெற்றதுவேறு எங்கு? என்று பெய்வளையார் தமைக் - . * . . . . கேட்டான்.” . - (பெ. பு-1747) இப்படி ஒரு பழத்தை அன்றுவரை அவன் உண்டதில்லை, ஆதலால் பெற்றது வேறு எங்கு? என்று அவன் கேட்டதில் தவறு ஒன்றும் இல்லை. இப்பொழுது பிரச்சினை சிக்கலாகிறது. சட்டங்களால் தரும சங்கடம் இறைவனுடைய அருள் ஒரு சிலரைப் பொறுத்த மட்டில் வேண்டுமானபொழுது, வேண்டிய அளவில் வந்து உதவும். அது எங்கிருந்து வருகிறது என்பதை அடியார்கள் நன்கறிவர். ஆனால், அவ்வருள் தமக்குச் செய்த பேருதவியை வெளியில் கூறக் கூடாது என்பது சட்டம். இப்படி ஒரு திட்டத்தை நம் முன்னோர் வைத்திருந்தனர். அதை வெளிப்