பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 சேக்கிழார் தந்த செல்வம் படையாகக் கூறினால் என்ன என்ற ஒரு வினாவை எழுப்பினால், அதன் விடையைக் காண்பது எளிது. ஒருவர் தாம் பெற்ற திருவருளை வெளிப்படக் கூறினால், அதனைக் கேட்பவர் இரு வகைப்படுவர். முதல் வகையினர், இதனை நம்பாதவர்கள். இதைக் கேட்டவுடன் எள்ளி நகையாடுவர். இறையருளை இழித்துப் பேசிய பாவத்திற்கு அவர்கள் உள்ளாவர். இரண்டாம் வகையினர், இறையருளை நம்புகின்றவர் கள். இதனைக் கேட்டவுடன் தங்களுக்கு ஏன் அது சித்திக்கவில்லை என்று மனக்கிலேசமும் பொறாமையும் அடைவர். இவற்றை எல்லாம் நன்கு அறிந்திருந்த நம் முன்னோர், இறைவனுடைய "செவ்விய பேரருள் விளம்பும் திறமன்று’ (பெ. பு1748) என்று சட்டம் வகுத்தனர். அம்மையார், கிடுக்கிப் பிடியில் அகப்பட்டுக் கொண்டார். ஒரு புறம், இறையருளால் மாம்பழம் கிடைத்த செய்தியை வெளியே சொல்லக் கூடாது என்ற சட்டம், மற்றொரு புறம், கற்புடைய மனைவி கணவன் கேட்ட வினாவிற்கு விடை கூறியே திர வேண்டும் என்ற சட்டம். இந்த இரு சட்டங்களும் அம்மையாரை நெருக்க, என்ன செய்வது என்று அறியாது மனம் தளர்ந்து மெய் விதிர்த்து நின்று விட்டார். - « . . . . . . . . . . . . .”