பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர்குல மாணிக்கம் 253 அசம்பாவித வினா இந்நிலையில், அவருடைய அருமைப்பாட்டை அறியாதவனும் கல்லால் கட்டிய அந்த வீட்டிற்குச் சொந்தக்காரனும் இல் இறைவன்) ஆகிய பரமதத்தன் அவர் நடுங்கும்படியாக ஒரு வினாவை அனாயச மாகக் கேட்டுவிட்டான். இந்தக் கேள்வி அவன் கேட்பதற்குச் சில வினாடிகள் முன்பே, தர்ம சங்கடத்தில் இருந்த அம்மையார் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். கணவனுக்கு விளக்கம் சொல்லா விட்டால் அவன் மனம் மாறுபடுவான். ஆனால், இறைவனுடைய சட்டத்தை மீற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு, அவனுடைய சட்டத்தை மீறலாம். இந்த எண்ணம் மனத்தில் தோன்றியவுடனேயே நடந்ததைச் சொல்ல அவர் வாய்திறக்குமுன், அவரை நடுங்கச் செய்யும் அவ்வினா அவனிடமிருந்து புறப்பட்டு விட்டது. இதனைச் சேக்கிழார் பின்வருமாறு கூறுகிறார். "செய்தபடி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார் மைதழையும் கண்டர் சேவடிகள் மனத்து உறவணங்கி, 'எய்தவரும்கனி அளித்தார் யார்'என்னும் கணவனுக்கு மொய்தருபூங் குழல்மடவார் புகுந்தபடிதனை . மொழிந்தார். ' (பெ. பு-1749)