பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர்குல மாணிக்கம் 255 வணிகன் இயலும் சோதனையும் நடந்தவற்றை அம்மையார் விரிவாக எடுத்துக் கூறினார். ஆனால், அவர் எதிர்பார்த்த பலன் கிட்ட வில்லை. பரமதத்தன் வைரம் பாய்ந்த மனநிலையில் உள்ள வியாபாரி ஒன்றைக் கொடுத்துத்தான் மற்றொன்றை வாங்கவேண்டுமே தவிர, இலவசமாக எதையும் யாரும் தரமுடியாது என்பதை நன்கு அறிந்தவன். அவனைப் பார்க்க வந்தவர்கள், இரண்டு பழங்களைத் தந்தார்களே, அது சிறிய மீனைப் போட்டுப் பெரிய மீனை இழுக்கின்ற தந்திரத்தின் ஒரு பகுதியாகும். மாங்கனிகளைக் கண்டு அவன் மகிழ்ந்திருக்கும் பொழுது அவனிடம் ஒரு வியாபாரத்தை நடத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் வந்தவர்கள் கனி தந்தார்கள். அதை அவனும் அறிவான்; அவர்களும் அறிவார்கள். இந்தப் பொருளியல் வாழ்வு முறையில் நன்கு பழகிவிட்ட அவன் மனத்தில் லாப நஷ்டக் கணக்குப் போடுவது தவிர வேறு எதுவும் புகுந்ததில்லை. எனவே, அம்மையார் ஈசனருளால் இப்பழம் கிடைத்தது’ என்று கூறியவுடன் அதை அவன் நம்பவில்லை. அவன் செய்கின்ற வணிகத்தில் இன்றுவரை அவன் ஈசன் அருள் என்ற ஒரு பொருளை விற்றதும் இல்லை, வாங்கியதும் இல்லை; கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. ஆனாலும் வடித்த