பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 சேக்கிழார் தந்த செல்வம் சிலை போல் எவ்வித மன. மாறுபாடும் இல்லாமல் அமைதியே வடிவாக எதிரே நிற்கும் அப்பெருமாட்டியை நிமிர்ந்து பார்க்கிறான். அவர் கூறியதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை, நம்பவும் முடியவில்லை. அவனுடைய குழப்பம் சில நிமிடங்கள் நீடித்திருக்க வேண்டும். அசல் வணிகனாகிய அவன் இதை நம்புவதா, வேண்டாமா என்பதற்கு ஒரு எளிதான வழியைக் கண்டு பிடித்துவிட்டான். ஆம்! அம்மையார் சொல்வது உண்மையானால் இன்னமும் ஒரு பழத்தை அவர் வரவழைக்க முடியுமா என்ற சோதனை வைத்துவிடலாம். மூன்றாவது பழத்தை அவர் பெற்றால் அவர் கூறியதை உண்மை என்று நம்பலாம் என்ற முடிவிற்கு வந்த அவன், "இது இரண்டாவது தந்த கனி) சிவபெருமான் திருவருளால் கிடைத்தது என்றால், இதே போன்ற மற்றொரு கனியை (மூன்றாவது பழத்தை) வர வழைத்துக் கொடு, பார்க்கலாம்” என்றான். அதனை மிக அழகாகச் சேக்கிழார், 'ஈசன் அருள்' எனக்கேட்ட இல்இறைவன், அது தெளியான்; வாசமலர்த் திருமனையார் தமைநோக்கி, மற்றிதுதான் தேசுஉடைய சடைப்பெருமான் திருவருளேல் - - இன்னமும்ஒர் ஆசுஇல்கனி அவன்அருளால் அழைத்து அளிப்பாய்' - -. w என மொழிந்தான். (பெ. பு-1750)