பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர்குல மாணிக்கம் 257 என்று கூறுகிறார். 'என் உரை பொய்யாம் - விளக்கம் முன்னர் இருந்த தர்மசங்கடத்தைவிடப், பெரிய சங்கடத்தில் புனிதவதியார் அகப்பட்டுக்கொண்டார். ஈசன் அருள் என்ற சொல்லுக்கு, அவனுக்குப் பொருள் விளங்கவில்லை என்பதை அது தெளியான் என்று கவிஞர் கூறிவிட்டார். இத்தகைய ஒரு கணவன், அம்மையாரைச் சோதனை இடுவதுமூலமாக ஈசன் அருளுக்கே ஒரு சோதனை வைத்துவிட்டான். இறைவனுடைய திருவருளைச் சோதனை இட்டுப் பார்க்கும் துணிவு மிக உயர்ந்த நிலையில் உள்ள அடியார்க்குக்கூட வராது. சராசரி மனிதனாகிய அவன் தன் மனைவிக்கு வைத்த சோதனை, ஆழத்தை அறிந்து கொள்ளாமல், இன்னும் ஒரு பழம் அழைத்து அளிப்பாய் என்று கூறிவிட்டான். இரண்டாவது பழத்தை இறைவனிடம் பெறும் பொழுது அவன் கொடுத்த பழத்தை அவன் திருப்பிக்கேட்கின்றான் என்ற நியாயத்தை அறிந்த அம்மையார், இறைவனிடம் அதை வேண்டிப் பெற்றார். ஆனால், இப்பொழுது அவன் கேட்பது பழம் என்ற பெயரில், இறைவனுடைய அருளுக்கு வைத்த சோதனையாகும். எனவே, அம்மையார் அறையினுள் சென்று பின்வருமாறு வேண்டுகிறார். o .