பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் தந்த செல்வம் 17 களிலும் திருவாசகத்திலும் துளையமாடிய அவருக்குத் திடீரென்று சுந்தரர் பாடிய பதிகம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அந்தப்பதிகம் வினோதமானது. ஏனைய பதிகங்கள்போல இறைவன் புகழை அது விரித்துப் பாடவில்லை. இன்னுங் கூறப்போனால், இறைவனைப் பற்றிய குறிப்புகள்கூட அதில் அதிகம் இல்லை. அந்தப் பதிகம் ஒரு பெயர்ப் பட்டியலே ஆகும். தமிழகத்தில் ஆண்டவனைப் போற்றிய அறுபதுக்கும் மேற்பட்ட அடியார் பெயர்ப்பட்டியல் ஆகும் அது. அப்பட்டியலில் காணப்பெற்றவர்கள் ஒரே காலத்தில் வாழ்ந்தவர் அல்லர், ஒரே ஊரில் வாழ்ந்தவரும் அல்லர்; ஒரே பிரிவினரைச் சேர்ந்தவரும் அல்லர். அப்பட்டியலில் ஆண்டியும் உண்டு; அரசனும் உண்டு; பெரும் வணிகர்களும் உண்டு, சட்டி செய்து கொடுத்து வாழும் மிக எளிய வணிகரும் உண்டு. மீன் பிடிப்பவர், சலவை செய்பவர், ஏன் சூதாடுபவர், சிவலிங்கத்தைக் கல்லால் அடிப்பவர் ஆகியவரும் அங்கே உண்டு. வேதியர், அரசர், வேளாளர், அரிசனர்கள் உள்பட அனைவரும் உண்டு. இப்படி எவ்வித ஒருமைப்பாடும் வாழ்க்கை முறையும் இல்லா அறுபதுக்கும் மேற் பட்டவர்களின் பெயர்களை அந்தப் பட்டியல் தாங்கி நிற்கிறது. 8ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளின் நூறு பதிகங்களில் இதுவும் ஒன்று என்பது தவிர, இதன்