பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர்குல மாணிக்கம் 259 இறைவனை கேட்பது முறையா என்ற வினா மனத்தின் ஒரு மூலையில் தோன்றினால் அதில் தவறு ஒன்றும் இல்லை. என் உரை என்று அம்மையார் கூறிய சொற்கள் எந்தக் கருத்தில் பேசப்பட்டது என்பதைச் சிந்திக்க வேண்டும். அந்த உரை யாது? ஈசன் அருள்” என்பதுதானே அந்த உரை, ஈசன் அருள் என்ற அந்த உரையை, அவர் சொல்லுமாறு செய்ததும் ஈசன் அருளே ஆகும். என்னுரை என்பதில் உள்ள 'என் மமகாரத்தைச் சுட்டாது, என்னைக் கருவியாகக் கொண்டு கூறச் செய்த நின்னருள்” என்ற பொருளைத் தந்து நிற்பதைக் காணலாம். х இரண்டு பழம் பெற்றபோது மனநிலை இறைவனுக்கு இப்பொழுது இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி இறையருளைப்பற்றி ஒன்றும் தெரியாத அவனுக்கு பழத்தைத் தராமலிருந்திருக்க லாம். ஈசனருள் என்ற சொல்லையே அறியாத ஒருவன் வைத்த சோதனைக்காக மற்றொரு பழத்தைத் தர வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. அவ்வாறு இறைவன் செய்திருப்பின், உடல், பொருள், ஆவி அனைத்தையும் தன்னிடம் வைத்த ஓர் அடியவரை இக்கட்டான சூழ்நிலையில் செலுத்திவிடும். வணிகனைத் திருப்திபடுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லையென்றாலும்,