பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 சேக்கிழார் தந்த செல்வம் அம்மையாரைக் காப்பது ஐயனின் கடமை ஆகின்றது. எனவே, அம்மையாரின் கையில் மற்றொரு பழம் வந்து அமர்ந்தது. அந்தப் பழத்தைக் கொண்டுவந்து அவன் கையில் கொடுத்தார் என்பதைச் சேக்கிழார் கூறும் விதத்தை நன்கு கவனிக்க வேண்டும். -ുജ്ഞങ്ങ ஆங்கு அவன் கைக்கொடுத்தலுமே அதிசயித்து வாங்கினான். (பெ. பு-75) இப்பாடலின்படி, அம்மையார் எவ்வித உணர்ச்சியும் இன்றி ஒரு இயந்திரம்போலப் பழத்தை அவன் கையிலிட்டார். தம் உரை பொய்யாகாமல், இந்த இரண்டாவது பழம் கிடைத்துவிட்டது என்று மகிழ வேண்டுமல்லவா? அவ்வாறு இல்லை என்கிறார் சேக்கிழார். அது ஏன் என்பதை, அறிய வேண்டுமானால் இதற்கு முந்தைய பழத்தை, அவனிடம் கொடுக்கும் பொழுது, அம்மையார் நிலையை எவ்வாறு கவிஞர் கூறுகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். - - "மற்று அதனைக் கொடுவந்து மகிழ்ந்து இடலும்’ - - - (பெ. பு-1747) என்று சேக்கிழார் கூறுகிறார்.