பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர்குல மாணிக்கம் 261 முதற் பழத்தை அவனிடம் கொடுக்கும் பொழுது அம்மையாருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதாம். இதற்கு அடுத்த பழத்தை அவன் கையில் கொடுக்கும் பொழுது எவ்வித உணர்ச்சியும் இல்லை என்றால், அதற்குரிய காரணம் யாது? முதற்பழத்தை கொடுக்கும், போது அது அவன் உரிமை என்று கருதினார். கணவன் கொடுத்த இரண்டு பழங்களில் ஒன்றைச் சிவனடியாருக்குத் தம் பொறுப்பில் இட்டுவிட்டார். அந்த இரண்டிற்கும் உரிமை உடையவன் ஆதலால், அடியார்க்கு இட்ட கதை தெரியாமல் இன்னொன்றையும் இடுக’ என்று. கேட்டுவிட்டான், என்றாலும் அப்பழம் அவனுக்கு உரிமை உடையதாகலின் மிக்க மகிழ்ச்சியாடு அதனை இட்டார். இப்பொழுது சோதனை அடிப்படையில் அவன் ஒரு பழத்தைக் கேட்கிறான். அந்தச் சோதனை இறையருளுக்கு மட்டுமல்லாமல் கட்டிய மனைவியைப் புரிந்துகொள்ளாமல், அவருக்கு வைத் சோதனையும் ஆயிற்று. , . . . . . . அம்மையார், இறைவன் கொடுத்த இரண்டாவது கனியை அவன் கையில் இட்டார். "வணிகனும் தன்கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான்” (பெ. பு-1752) என்கிறார் சேக்கிழார். இறைவன் தந்த பழங்கள்தாமே இரண்டும்; ஒன்றை அவன் உண்ண