பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 சேக்கிழார் தந்த செல்வம் முடிந்தது, இரண்டாவது கனி அவன் கையில் விழுந்தவுடன் மறைந்தது, ஏன்? முதல் கனி அவனுக்கு உரிமை உடையதாகும். இரண்டாவது கனி, சோதனையாகும். இறைவன் திருவருளால் மாமரம் இல்லாமல் மாங்கனி கிடைக்குமா என்ற அவன் ஐயத்தைப் போக்க வந்த கனியாகும். அம்மையார் கையிலிருக்கும்பொழுதே, அக்கனி மறைந்திருந்தால், வணிகனாகிய அவன் அதை நம்பியிருக்கமாட்டான். அதனாலேயே அப்பழம் பழத்திற்குரிய கனத்துடன் அவன் கையில் புகுந்தது. அவன் வியப்பதற்கு முன்னர் அது மறைந்துவிட்டது. சோதனையாக அவன் கேட்ட கேள்வியை மறுபடியும் நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். அம்மையாரை அவன் கேட்டது ஒன்று. 'இன்னமும் ஒர் ஆசுஇல்கனி அழைத்து அளிப்பாய்’ என்றுதானே கேட்டான்?அவன் விரும்பிய இரண்டும் நடந்துவிட்டது. அம்மையார் பழத்தை அழைத்தார். அவன் கையிலும் அளித்துவிட்டார். ஆனால், அனுக்குரிமை இல்லாத அப்பழத்தை உண்பதற்கு அவனுக்கு உரிமையும் இல்லை. நல்லூழும் இல்லை. இறையருளால் கிடைத்த முதல் கனியை மகிழ்ந்து இட்ட அம்மையார், இரண்டாவது கனியை அவன் கையில் இடும்பொழுது எவ்வித உணர்ச்சியுமின்றி இருந்தார் என்று கண்டோமல்லவா? அது ஏன்? அவன் வைத்த சோதனையில் வெற்றி கண்டமையின்