பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர்குல மாணிக்கம் 263 மகிழ்ந்திருக்க வேண்டுமல்லவா? அவ்வாறு மகிழாமைக்குக் காரணம் யாது? ஆழ்ந்து சிந்தித்தால் உண்மை விளங்கிவிடும். அவனுக்குரிய முதல் பழத்தை தரும்பொழுது மனைவியாக நின்ற புனிதவதியார் கணவன் கேட்டதைக் கொடுத்தோமே என்று மகிழ்ந்தார். இறைவனை வேண்டி அவனருாளல், இரண்டாவது கனி அம்மையாரின் கையில் கிடைக்கும்பொழுது அங்கே மனைவி இல்லை; புனிதவதியாரும் இல்லை; இறை அருளுக்குப் பாத்திரமான ஒரு சிவனடியார்தான் இருக்கிறார். உடம்பு புனிதவதியாரின் உடம்பாக இருப்பினும், இறையருளை முழுவதுமாகப் பெற்ற அடியார்களுக்கு விருப்பு, வெறுப்பு, மகிழ்ச்சி, துயரம் என்பவை அனைத்தும் அற்றுச் சமதிருஷ்டி ஏற்படுவது போன்ற மனநிலையை இப்பொழுது அம்மையார் பெற்று விட்டார். முதற்பழம் கைக்கு வந்தபொழுது பரம தத்தன் மனைவியாகபுனிதவதியாக-இருந்தவர், இரண்டாவது பழம் கைக்கு வந்தபொழுது ஸ்திதப் பிரக்ஞ ஞானியாக வளர்ந்துவிட்டார். சில மணித் துணிகளில் நிகழ்ந்த இம் மாற்றத்தை துணுக்கமாகக் கூறவந்த சேக்கிழார், முதல் பழத்தை மகிழ்ந்து இட்டார் என்றும், இரண்டாவது பழத்தை உணர்ச்சி இன்றிக் கையில் தந்தார் என்றும் கூறுவதன் மூலம் அவருடைய ளை ச்சியை எடுத்துக்காட் டிவிட்டார்.