பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகர்குல மாணிக்கம் 265 உலகவருக்கு எந்த வடிவமாயினும் என்ன? அம்மையார், இறைவனை வேண்டிப் பேய்வடிவு பெற்றுக், கயிலை புறப்பட்டதைச் சேக்கிழார் விரிவாகப் பாடிச் செல்கிறார். இப்பகுதியில், இன்று வாழும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பேய் வடிவு கொண்டு, தெருவினுடே செல்லும் எலும்புக் கூடாகிய அம்மையாரைப் பார்த்து மக்கள் பயந்துகொண்டே ஓடுவதல்லாமல், பேய் போகிறது என்று அச்சமும், குளறலும் சேர்ந்த தொனியில் பேசுவது அம்மையாரின் காதில் கேட்கிறது. அப்பொழுது அம்மையார் தம் மனத்துள் என்ன எண்ணினார் என்பதைச் சேக்கிழார் இதோ கூறுகிறார். கண்டவர் வியப்புற்று அஞ்சிக் கை அகன்று ஓடுவார்கள் கொண்டதோர் வேடத் தன்மை உள்ளவர் கூறக் கேட்டே 'அண்டர் நாயகனார் என்னை அறிவரேல் அறியா வாய்மை எண்திசை மாக்களுக்கு யான் எவ்உரு வாய்என்? என்பார். ' --. - o (பெபு:175) இப்பாடலின் பின்னிரண்டு அடிகள் அம்மையாரின் மனநிலையை நன்கு எடுத்துக்காட்டுகின்றன. 'இறைவன் என்னை அறிந்து ஏற்றுக்கொள்ள